150 பயணிகளுடன் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இருந்து 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது.

மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 40 மைல் தொலைவில் உள்ள டோமோடெடோவா விமான நிலையத்திலிருந்து 150 பயணிகளுடன் திங்கட்கிழமையன்று விமானம் ஒன்று புறப்பட்டது.

ஓடுபாதையில் விமானம் சென்றுகொண்டிருந்த போது, விமானியின் தவறான கணிப்பால் சரியான நேரத்தில் விமானத்தை மேலெழுப்ப தவறிவிட்டார்.

இதனால் ஓடுபாதையில் இருந்து விலகி அதிவேகத்தில் விமானம் சென்றது. இதில் விமானத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்திலிருந்து தப்பி ரஷ்யாவின் கிரிமியாவில் உள்ள சிம்பெரெபோல் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோ காட்சி விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் விமான நிர்வாகம் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஆனால் ஓடுபாதையிலிருந்து விமானம் விலகியதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...