மலேசிய மன்னர் இதற்காகத்தான் மொடல் மனைவியை விவாகரத்து செய்தாராம்: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மொடல் ஒருவரை திருமணம் செய்து, அவருக்காக தனது பதவியையும் துறந்த மலேசிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது, திடீரென அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், மன்னரின் குடும்பத்தார் அவருக்கு பொருத்தமான மற்றொரு பெண்ணை தேர்வு செய்துள்ளதால்தான் அவர் திடீரென தனது மொடல் மனைவியான ஒக்சானாவை விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஸ் மாஸ்கோ பட்டம் பெற்றவரும், மொடலுமான ஒக்சானாவை திருமணம் செய்து கொண்ட மலேசிய மன்னர், திடீரென அவருக்கு தெரிவிக்காமலே அவரை விவாகரத்தும் செய்துவிட்டார்.

காதல் மனைவிக்காக பதவியையே துறக்கத் துணிந்த மன்னர், திடீரென அவரை விவாகரத்து செய்தது ஏன் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்தது.

இதுவரை அதற்கான பதில் கிடைக்காமலே இருந்த நிலையில், மன்னர் தனது பதவியையும் மனைவியையும் துறக்க காரணம் அவரது குடும்பம்தான் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர் பதவியையும் மனைவியையும் துறக்க முக்கிய காரணம் மன்னரின் 70 வயதான தாயாரும் மற்ற மலேசிய சுல்தான்களும்தானாம்.

மன்னரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் இது குறித்து கூறும்போது, மன்னரின் ரஷ்ய மனைவியை மன்னரின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறியதோடு, மன்னர்தான் ஒக்சானாவின் குழந்தைக்கு தந்தையா என சந்தேகம் எழுந்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை மணப்பதுதான் பாரம்பரியம், ஒக்சானா தவறான தேர்வு என்று கூறிய அவர், அத்துடன் மலேசியாவைப் பொருத்தவரை மன்னர் ஒரு பிரதிநிதிதான், உண்மையில் ஆட்சி செய்வது சுல்தான்கள்தான் என்றார்.

குடும்பத்தை எதிர்த்து மன்னர் ஒரு ரஷ்யப் பெண்ணை மணந்து கொண்டதால், அவர்கள் மன்னரை பதவியை துறக்க வற்புறுத்தினார்கள். அவரும் அதற்கு சம்மதித்தார்.

அதன் பின்னராவது தனது மனைவியை தனது குடும்பம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்பினார் மன்னர்.

ஆனால் அது நடக்கவில்லை, மன்னரின் தாய் அவரது மனைவியை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

மீண்டும் அவரது குடும்பம் அவரை வற்புறுத்தியது, அவர் விவாகரத்தும் செய்தார்.

இது எதையுமே ஒக்சானாவுக்கு தெரிவிக்கவில்லை, காரணம் எங்கள் குடும்பங்களில் பெண்களின் கருத்துக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை, அதிலும் வெளிநாட்டுப் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் என்கிறார் அந்த நபர்.

வெளியாகியுள்ள இன்னொரு தகவலின்படி, மன்னரின் குடும்பத்தார் ஏற்கனவே ஒரு பெண்ணை மன்னருக்காக தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றும், அந்த பெண்ணை மன்னருக்கு மனைவியாக்குவதற்காகத்தான் ஒக்சானா திடீரென விவாகரத்து செய்யப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...