காஷ்மீர் விவகாரம் தொடர்பில் முக்கிய விவாதம்..! 54 ஆண்டுகளுக்கு பின் ஐநா சபையில் இன்று ஆலோசனை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
73Shares

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஐ.நா.சபையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வகையில் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் ஆதரவை பாகிஸ்தான் நாடியது. சீனாவும் ஆதரவான நிலையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் கடிதம் கொடுத்தது. அத்துடன் பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடான சீனாவும், இந்த விவாதத்தில் பங்கு பெற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கோரிக்கையை, ஐ.நாவின் பாதுகாப்பு சபை தலைவரான நிதி ஜோன்னா ரொனேக்கா ஏற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உறுப்பு நாடுகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.

ரகசியமாக நடத்தப்படும் இந்த ஆலோசனையில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, பிரித்தானியா ஆகிய முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவை இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1965ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது 54 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விடயத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்