10 நிமிடத்தில் திரும்பவில்லை என்றால்... மனைவியிடம் கூறிச் சென்ற நபருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் காளான் சேகரிக்க சென்ற நபர் ஒருவர் தமது மனைவியிடம், 10 நிமிடத்தில் திரும்பவில்லை எனில் கரடி கொன்றதாக கருதிவிடு என கூறி வெளியே சென்றவரை கரடி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ரஷ்யாவில் உள்ள சுலுக் என்ற கிராமத்திற்கு அருகில் 66 வயதான அலெக்சாண்டர் கோர்னீவ் என்பவரையே கரடி அடித்து கொன்றுள்ளது.

தமது மனைவியை கிண்டல் செய்யும் விதமாக, தம்மை கரடி தாக்க வாய்ப்புள்ளதாக கூறிவிட்டு அலெக்சாண்டர் கோர்னீவ் காளான் சேகரிக்க சென்றுள்ளார்.

அலெக்சாண்டர் கரடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம், அவரது மனைவியிடம் தெரிவித்த போதும் அவர் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் தமது கணவர் கொல்லப்பட்டது உண்மை தான் என அறிந்த பின்னர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு வெகுநேரமானதாக கூறப்படுகிறது.

அலெக்சாண்டரின் சடலத்தை உருத்தெரியாத வகையில் கரடி சின்னாபின்னமாக சிதைத்துள்ளது.

அப்பகுதி மக்கள் திடீரென்று கேட்ட அலறல் சத்தத்தால் சம்பவப்பகுதிக்கு விரையும் முன்னர், கரடி அவரை கொன்றுள்ளது.

அந்த பகுதி முழுவதும் ரத்தமும் சதையுமாக சிதறிக் கிடந்துள்ளது. சுலுக் கிராமத்தில் இதுவரை கரடி தாக்கி ஒருவர் இறந்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அலெக்சாண்டரை தாக்கிய அந்த கரடியை அப்பகுதி மக்கள் பின்னர் வேட்டையாடி கொன்றுள்ளனர்.

தற்போது குறித்த வனப்பகுதியில் செல்லும் மக்களுக்கு பொலிசார், கரடி தாக்க கூடும் என எச்சரித்து அனுப்புகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்