அமெரிக்கா-ரஷ்யா போர்...! 10 ஆண்டுகள் பூமி இருளில் மூழ்கும்.. உலகிற்கு பேரழிவு எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுத போர் பூமியை பத்து வருட குளிர்காலத்தில் மூழ்கடிக்கக்கூடும், உலகம் மொத்தமும் இருளில் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஏவுகணைகளில் இருந்து வெளியேறும் தீ, 147 மில்லியன் டன் புகைக்கரி மற்றும் தூசியை வளிமண்டலத்தில் வெளியிடும். இது பல ஆண்டுகளாக சூரிய ஒளியைத் தடுக்கும். ஒளி இயல்பு நிலைக்கு வர பத்து ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 9 செல்சியஸ் வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல விஞ்ஞானி ஜோசுவா கூப், அணு ஆயுத போருக்கு காலநிலை எவ்வாறு எதிர்விளையாற்றும் என்பதை உருவகப்படுத்தியுள்ளார். ஜோசுவா கூப் தலைமையிலான குழு தங்கள் கண்டுபிடிப்புகளை, நீண்ட குளிர்காலத்தை கணித்த 2007 ஆம் ஆண்டு நாசாவின் ஆய்வோடு ஒப்பிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பெரிய அளவிலான அணு ஆயுத போரின் விளைவாக பூமியில் அணு குளிர்காலம் ஏற்படும். அத்தகைய அணு ஆயுத தாக்குதலை நடத்த முடிவு செய்யும் நாட்டிற்கு, அது தற்கொலையாக இருக்கும். அமெரிக்காவும் ரஷ்யாவும் அத்தகைய முறையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உலகளவில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.

இறுதியில், அணு ஆயுதங்களை குறைப்பது மற்றும் அணு ஆயுத திறன் கொண்ட அனைத்து நாடுகளையும் நிராயுதபாணியாக்குவதே இந்த பூமியின் நலனுக்கு முக்கிய தேவை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்