திருமணம் நடந்த தேவாலயத்தில் திடீரென தாக்கிய மின்னல்: நடுங்கிப்போன மக்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
65Shares

இத்தாலியில் திருமணம் நடைபெற்ற தேவாலயம் ஒன்றில் திடீரென மின்னல் தாக்கியதில் மின்சாரம் தடைப்பட்டதால் அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இத்தாலியின் சிசிலியில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த மாத ஆரம்பத்தில் ஒரு தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண முடிந்து பாதிரியார் இறுதி ஆசிர்வாதம் வழங்கிய போது, திடீரென பலமாக மின்னல் தாக்கி இடி விழுந்துள்ளது. இதில் தேவாலயத்தின் மின்சாரம் சட்டென தடைப்பட்டதால் உள்ளே இருந்த அனைவரும் திகைத்துபோயுள்ளனர்.

ஆனால் அடுத்த நிமிடமே, பயத்தை மாற்றி கைத்தட்டலுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை வீடியாவாக பதிவு செய்த புகைப்படக் கலைஞர் பிராங்கோ லா புவா, அந்த இடிச்சத்தம் தேவாலயத்தையே நடுங்க செய்தது.

இருளில் மூழ்கிய அந்த ஒரு நிமிடம் முழுவதும் அமையதியாக மாறி பின்னர் கைதட்ட ஆரம்பித்தனர். அவர்களுடன் பாதிரியாரும் கலந்துகொண்டார். அன்றைய தினம் முழுவதுமே இடிச்சத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதுமிகவும் தனித்துவமான சம்பவம். இதுபோன்று மீண்டும் நிகழாது என்று நான் நினைக்கிறன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்