16,000 பவுண்ட்ஸ் பணம் கேட்டதற்காக காதலியை எரித்துக்கொலை செய்த காதலன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் மனைவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்து, உடலை எரித்து தடயத்தை அழிக்க முயன்ற கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த 51 வயதான லெஸ்லி கூ க்வீ ஹாக் என்பவர் சலவை கடை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஒரு குழந்தைக்கு தந்தையான லெஸ்லி, தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறி Cui Yajie (31) என்கிற பெண்ணை ஏமாற்றி காதலித்து வந்துள்ளார்.

தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி, Cui Yajie-விடம் இருந்து 20,000 டொலர்களை (£ 16,503) வாங்கிய லெஸ்லி அதனை செலவு செய்துள்ளார்.

உண்மை தெரியவந்ததும் ஆத்திரமடைந்த Cui Yajie, கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி லெஸ்லியை வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவரும் சந்தித்து ஒருமுறை பேசிக்கொண்டிருந்த போது, லெஸ்லியின் உண்மை முகத்தை பற்றி அவர் வேலை செய்யும் உரிமையாளரிடம் கூறிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனைக்கேட்டு பயந்துபோன லெஸ்லி, Cui Yajie-வை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, பின்னர் தடயத்தை மறைப்பதற்காக அவருடைய உடலை தீ வைத்து எரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, Cui Yajie-யின் ஆடை மற்றும் தலைமுடி சிக்கியுள்ளது. அதன்பேரில் லெஸ்லியை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் செய்த குற்றம் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, லெஸ்லிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்