வயிற்று வலியால் துடித்து மருத்துவமனைக்கு வந்த நபர்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன தெரிந்தது

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது அவரின் வயிற்றின் உள்ளே மின் முள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானைச் சேர்ந்த 72 வயது நபர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அவர் உடனடியாக Nankoku பகுதியில் இருக்கும் Kochi Medical School மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவரை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது, உள்ளே ஏதோ ஒன்று ஒல்லியாக இருப்பதைக் கண்டுள்ளனர்.

ஆனால் அது என்ன என்பது தெரியாமல் இருந்ததால், சில தினங்கள் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, வயிற்றின் உள்ளே அவர் சாப்பிட்ட yellowtail மீனின் முள் இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்து நீக்கியுள்ளனர்.

அதன் பின் தொடர்ந்து 8 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்