ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி உத்தரவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனைக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான தகவலில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட ரஷ்ய ஜனாதிபதி புடின் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனையை அடுத்து ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை அமெரிக்கா ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட சோதனையில் 500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்கை ஏவுகணை சரியாக தாக்கியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா- ரஷ்யா இடையிலான குறுகிய தூர ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தின் மூலம் இது போன்ற சோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்கா ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க ஏவுகணை சோதனை குறித்து ரஷ்யாவும், சீனாவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவின் சோதனைகளுக்கு ரஷ்யா கண்டனமும் தெரிவித்தது.

இதே போன்று ரஷ்யா உடனான கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கான தடை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை மிண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

ரஷ்ய நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே நடவடிக்கை தொடரும் என்றால், ரஷ்யாவும் மேலதிக ஆயுதங்களை சோதனை மேற்கொள்ளும் கட்டயத்திற்கு தள்ளப்படும் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டுமின்றி, தற்போதைய சூழலில், அமெரிக்காவுடன் எந்த ஆயுத போட்டிக்கும் ரஷ்யா தயாரில்லை எனவும்,

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் எந்த அழிவுத் திட்டத்தையும் ரஷ்யா முன்னெடுக்காது எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யா சோதனை மேற்கொண்ட 9M730 Burevestnik ஏவுகணையானது தோல்வியில் முடிந்த சம்பவத்திற்கு பின்னர் உலக நாடுகளில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்