இரவு தூங்கிய 2 வயது சிறுமி பின்னர் கண் விழிக்கவே இல்லை: 8 மாதமாக குழம்பும் மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கஜகஸ்தான் நாட்டில் கடந்த 8 மாதமாக கோமா நிலையில் இருக்கும் 2 வயது சிறுமிக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டு மருத்துவர்கள் குழம்பி போயுள்ளனர்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் கஜகஸ்தான் தாயாரான Shynar Bekmagambetova தமது 2 வயது பிள்ளையை இரவு தூங்க வைத்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் இதுவரை குறித்த சிறுமி கண்விழிக்கவில்ல எனவும் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

2 வயதான சிறுமி Ayaulym தமது வயதுக்கு தகுந்தவாறு பேசுவதும், தாயாருடன் உற்சாகமாக விளையாட்டிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு குழல் வழியாகவே திரவ உணவுகளை வழங்கி வருகின்றனர். மட்டுமின்றி, எப்போதாவது ஒருமுறை கண்கள் திறந்து மூடுவதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர் சிகிச்சையின் மூலம், தற்போது சில வேளைகளில் அழுவதாகவும், ஆனால் முழுவதுமாக விழிப்பு நிலையில் அவர் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

சிறுமியின் தாயார் Shynar தினமும் வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே தமது மகளுக்கு அளித்து வருகிறார்.

ஒவ்வொருமுறை சிறுமி கண் திறந்து அழும் போதும், எதாவது செய்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா என கதறுவது போல உள்ளது என Shynar கண் கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

கருவில் இருக்கும்போதே தொற்று நோய் தாக்கியிருக்கலாம் எனவும், அது தற்போது பிள்ளையின் மூளையை பாதித்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்