ஸ்பெயின் நாட்டில் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஆடம்பர சொகுசு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, உள்ளிருந்த 15 பேரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்காவின் மிக நீண்ட கடற்கரையில் நின்று கொண்டிருந்த 103 அடி சொகுசு கப்பலில் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து கரும்புகை அதிக அளவு வெளியேறுவதை கவனித்த கடற்படையினர் இரண்டு கப்பல்களில் விரைந்து சென்று, உள்ளிருந்த 15 பேரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
இந்த சம்பவத்தில் எந்த ஒரு நபருக்கு காயம் ஏற்பட்டதாக அறிக்கைகளில் வெளியிடப்படவில்லை. குழு உறுப்பினர்கள் உதவி கோருவதற்கு முன்பு தீயை அணைக்க ஒரு ஆரம்ப முயற்சியை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது. மற்ற 14 பேரைக் காப்பாற்றிய பின்னர் தீயைச் சமாளிக்க கேப்டன் மட்டும் கப்பலில் இருந்துள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.