ரஷ்யாவில் காணாமல் போன சிறுமி மூன்று நாட்களுக்கு பின்னர் நடுகாட்டில் உயிருடன் மீட்க்கப்பட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
5 வயது ஜரீனா அவ்கோனோவா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் காணாமல் போனார்.மாஸ்கோவிலிருந்து 460 கி.மீ தொலைவில் உள்ள Nizhny Novgorod பிராந்தியத்தில் உள்ள Stepanovka கிராமத்திலிருந்து காளான் எடுப்பதற்குச் சென்ற உறவினர்களைத் தேடும் போது அருகிலுள்ள காட்டில் தொலைந்து இருக்கலாம் என கூறப்பட்டது
மீட்புக் குழுக்கள் முதலில் கிராமத்தில் தேடின. நீச்சல் வீரர்கள் பல ஏரிகளையும் சர்மா நதியையும் ஆய்வு செய்தனர், 800 க்கும் மேற்பட்டவர்கள், தன்னார்வலர்களாக இருந்த பலர் காடுகளைத் தேடத் தொடங்கினர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் முதல் இரவில் பலத்த மழையால் காடுகளில் தேடும் பணியில் இடையூறு ஏற்பட்டது. மூடுபனி மற்றொரு பிரச்சனையாக இருந்தது. மூடுபனி இரவில் தேடுவதை கடினமாக்குகிறது, சூரிய உதயம் வரை அது போகாது என்று தன்னார்வலர்களில் ஒருவர் கூறினார்.
டி-ஷர்ட், ஷார்ட்ஸ் மற்றும் பூட்ஸ் மட்டுமே அணிந்திருந்த சிறுமி, இரவில் குளிரை தாங்க முடியாது. அவள் காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்பட்டது. தேடுதல் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன, மேலும் தேடல் நாய்கள் மற்றும் கமெராக்களும் பயன்படுத்தப்பட்டன.
செவ்வாயன்று, புளூபெர்ரி தோட்டத்திற்கு அருகே ஜரினாவின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய தாய் மற்றும் பாட்டியின் குரல் பதிவுகளையும் தேடுதல் பணிக்காக மீட்புக் குழுவினர் பயன்படுத்தினர்.
மூன்று நாட்களுக்கு மேலாக காணாமல் போன பின்னர், இறுதியாக புதன்கிழமை மாலை ஜரீனா கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த வீடியோவில், கறுப்பு காட்டில் ஒளிரும் விளக்குகளுடன் மீட்பு குழுவினர் தேடல் ரோந்து செல்வதைக் காட்டுகிறது, அவர்கள் இறுதியாக சிறிய சிறுமியை கண்டுபிடிக்கின்றனர், அவர் மீட்கப்படுகையில் அமைதியாக இருந்தார்.
சிறுமி குறித்த முதற்கட்ட அறிக்கையில், அவள் பாதிப்பில்லாமல் இருந்தாள், ஆனால் கடுமையாக சோர்ந்து போயிருந்ததாக கூறப்பட்டது.
Missing 5yo girl rescued in Russia after spending NEARLY THREE DAYS alone in a forest
— RT (@RT_com) August 25, 2019
READ MORE: https://t.co/5pI0ONSlW3 pic.twitter.com/W9jeZhqHWc
குழு சிறுமியைக் கண்டுபிடித்தபோது, அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் நலனாகவும் இருந்தார் என்று தேடல் ஈடுபட்ட ஒருவர் கூறினார். அவள் முதலில் இனிப்புகள் கேட்டாள். அவள் கொஞ்சம் தண்ணீர் மற்றும் கேக் வேண்டும் என்று சொன்னாள். மீட்க்கப்பட்ட சிறுமி மருத்துவ உதவியைப் பெறுவதற்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.