தொடர்ந்து எரியும் லட்சக்கணக்கான ஏக்கர் அமேசான் காடுகள்.. போராடும் தீயணைப்பு வீரர்கள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் பலர் போராடி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக அமேசான் காடுகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயினால், மிகப்பெரிய அளவில் சேதமும், சுற்றுச்சுழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அங்கு வாழும் சுமார் 14 லட்சம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இந்த காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த காடுகளில் வாழும் உயிரினங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக 646 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயினால் வெளியேறும் கரும்புகையால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் டேங்கர், 4 ஹெலிகாப்டர்கள், 6 ராணுவ விமானங்களின் உதவியுடன் பொலிவியாவின் தீயணைப்பு துறையினர் அமேசான் காடுகளில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்தாலும், மீண்டும் இந்த பகுதிகள் வனச்சோலையாக மாற மேலும் 200 ஆண்டுகள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்