ராணுவத்தை அழிக்க ட்ரோன் அனுப்பிய ஐ.எஸ்... மறதியால் அவன் தலையே வெடித்து சிதறிய கோரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக்கில் ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாதி ட்ரோன் மூலம் அனுப்பிய வெடிகுண்டு திரும்பி வந்து அவரிடமே வெடித்து சிதறி கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு ஈராக்கில் மொசூலுக்கு அருகே இச்சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முட்டாள்தனமான பயங்கரவாதி நகரத்தை தளமாகக் கொண்ட ராணுவ படைகளை குறிவைத்து குண்டை வெடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, ட்ரோன் மூலம் பிளாஸ்டிக் வெடிபொருளை எடுத்துச் செல்லும் ஆயுதத்தைத் தயாரித்து தாக்குதல் நடத்த பறக்கவிட்டுள்ளார், ஆனால் ட்ரோனின் பேட்டரியை போதுமான அளவு சார்ஜ் செய்ய மறந்துவிட்டதால் அவரது திட்டம் பின்வாங்கியது.

பொதுமக்கள் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை பயன்படுத்தி ஐ.எஸ் ஆயுதம் ஏந்தியவையாக மாற்றுகின்றனர். அவை பேட்டரி சார்ஜை இழக்க தொடங்கும் போது தானாகவே ஏவப்படும் இடத்திற்குத் திரும்பும். இயந்திரத்தை இழக்காமல் இருக்க அவை உரிமையாளர்களிடமே திரும்பி வரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது: எதிரிகளின் செயல்பாடு மற்றும் திட்டங்கள் குறித்து உள்ளூர் மக்கள் உளவுபார்த்து தகவல் அளிக்கின்றனர்.

இந்த முட்டாள் பயங்கரவாதி தனது ட்ரோனை வெடிபொருட்களைக் கொண்டு தயாரித்ததை நாங்கள் அறிந்தோம், ஆனால் அது பேட்டரிகள் குறைவாக இயங்கும்போது அவனிடமே சென்ற வெடித்துள்ளது. இதில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

 A jihadi in a 2017 ISIS 'teaser trailer' featuring huge explosions after drone strikes

சில காரணங்களால் சிக்னல் குறைவாக இருந்ததால் அது அவரது தலைக்கு மேல் வெடித்துள்ளது.இது எங்களுக்கு மிகவும் சிரிப்பை ஏற்படுத்தியது, ஆனால் ட்ரோன் அச்சுறுத்தல் மிகவும் மோசமானது.

ஐ.எஸ் அதன் ட்ரோன் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் முன்னேறியுள்ளது, அது அதன் விமானப்படை என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் எங்கு செயல்படுகிறோம் என்பதை அவர்கள் பார்க்கலாம், இலக்குகளைத் தேர்வுசெய்து மூன்று மைல் தொலைவில் இருந்து ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்