சவுதி நகரத்தை அழிக்க வந்த 6 ஏவுகணைகள்.. சதியை மதியால் முறியடித்த அரபு கூட்டுப்படை

Report Print Basu in ஏனைய நாடுகள்

சவுதியில் தாக்குதல் நடத்த ஹவுத்தி கிளர்ச்சியார்கள் குழு ஏவிய ஆறு ஏவுகணைகளையும் அரபு கூட்டுப்படை தடுத்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் மாகாணமான சதாவில் இருந்து தெற்கு சவுதி நகரமான ஜாசான் நோக்கி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, அதன் படைகள் தடுத்து அழித்துள்ளதாக அரபு கூட்டணி தெரிவித்துள்ளது.

அரபு கூட்டணி செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறுகையில், ஹவுத்திகள் ஜசானில் உள்ள பொதுமக்களையும், உள்கட்டமைப்யைபும் குறிவைக்க முயற்சிக்கின்றனர்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து பொதுமக்களையும், பொதுமக்களின் உள்கட்டமைப்பையும் குறிவைப்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரானது. கூட்டுப்படை ஆதரவுடன் Saada ஆளுநரின் அதிரடி ராணுவ நடடிவடிக்கையை தொடர்ந்து, ஹவுத்தி குழு ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது, அதன் வீரர்களின் இழப்புகளை பிரதிபலிக்கின்றன என்று அல் மாலிகி அறிக்கையில் கூறினார்.

சர்வதேச மனிதாபினமான சட்டத்திற்கு எதிரான ஹவுத்தியின் விரோதப் போக்கு மற்றும் பயங்கரவாத போர்க்குற்றங்கள் அதிகரிப்பு அவர்களின் குற்றங்களை நிரூபிக்கிறது என அல் மாலிகி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்