வெளிநாட்டில் பிரித்தானியா வம்சாவளியினருக்கு உதவிய நபர்... நெகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரித்தானியா வம்சாவளி குடும்பத்தினர் தங்களுடைய நாயை வெளிநாட்டில் தொலைத்துவிட்டதால், அது குறித்து சமூகவலைத்தளங்கள் உட்பட பல வகையில் விளம்பரப்படுத்தியதால், தற்போது அந்த நாய் கிடைத்துள்ளது.

பிரித்தானியா வம்சாவளியைச் சேர்ந்தவர் Lisa Sykes. இவர் தன் குடும்பத்தினருடன் இப்போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஐக்கியர் அரபு அமீரகத்திற்கு கணவர் Keith Sykes, 10 வயது மகன் Hebe மற்றும் 9 வயது மகன் Sidney ஆகியோருடனும், தான் ஆசையாக வளர்த்து வந்த செல்ல நாய் குட்டி Buddy-யுடன் வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த புதன் கிழமை இவரின் நாய்குட்டி Sharjah-வின் Al Nassiyah Area-வுக்கு சுற்றியுள்ள பகுதியில் காணமல் போயுள்ளது.

இதனால் Lisa தன் கணவர் மற்றும் சிலரின் உதவியுடன் அங்கிருக்கும் தெருக்கள், கடைகள் மற்றும் மசூதி பக்கம் எல்லாம் தேடியுள்ளார்.

ஆனால் கிடைக்காத காரணத்தினால் மிகவும் வேதனையடைந்த அவர் இது குறித்து உள்ளூர் விலங்கு நல அமைப்பிற்கு புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் தன் செல்ல நாய் குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு, இது தொலைந்து போய்விட்டது, கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு Dh 2,000 தருவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட Abid Yasin என்பவர் இவர்கள் விளம்பரப்படுத்திய நாய் போன்றே Al Jubail பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மீன் மார்க்கெட்டில் பார்த்துள்ளார்.

அதன் பின் இது குறித்து அந்த விளம்பரத்தில் இருந்த Lisa-வின் போன் நம்பருக்கு போன் செய்து பேசிய போது, லிசா உடனடியாக அதை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார். இதையடுத்து புகைப்படத்தை பார்த்த போது அது Buddy என்பது உறுதியானதால், நாயை குறித்த இடத்திற்கு சென்று வாங்கியுள்ளனர்.

அப்போது அறிவிக்கப்பட்ட பணத்தை அவர் கொடுக்க முயன்ற போது, அவர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின் Lisa குடும்பத்தினர் வற்புறுத்திய பின்னரே அவர் வாங்கியுள்ளார். இப்போது Lisa குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்