சிறுத்தை இருந்த கூண்டை தெரியாமல் திறந்து விட்ட நபர்! அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் விலங்குகள் பூங்காவிற்கு பேரனுடன் வந்திருந்த தாத்த தெரியாமல் சிறுத்தை இருந்த கூண்டை திறந்ததால், சிறுத்தை அதிலிருந்து தப்பி அனைவரையும் கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 22-ஆம் திகதி தாய்லாந்தின் Koh Samui-ல் இருக்கும் safari park-க்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் யானை சவாரி முடித்துவிட்டு, அதன் பின் சிறுத்தை இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்தனர்.

அந்த நேரத்தில் தன்னுடைய இரண்டு வயது பேரனுடன் இருந்த தாத்தா திடீரென்று உள்ளே சிறுத்தை இருப்பது தெரியாமல், அந்த கூண்டின் கதவை திறந்ததால், முதலில் தயங்கிய அந்த சிறுத்தை அதன் பின் அடுத்த சில நொடிகளில் வெளியில் வந்த சுற்றுலாப்பயணிகளை கடிக்க முற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் உயிரைக் காப்பாற்றி கொள்ள அலறி அடித்து ஓடினர். இரண்டு வயது சிறுவனை சிறுத்தை துரத்தியுள்ளது.

அடுத்த சில நிமிடங்களில், பூங்காவின் ஊழியர் உடனடியாக வந்து சிறுத்தையை மிரட்டி மீண்டும் கூண்டிற்குள் கொண்டு சென்று அடைத்தார்.

இதனால் சிறுவனின் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு காயமடைந்தால் கூட, அழைத்துச் செல்ல இங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை, என் பேரனை காரில் வைத்து தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த சம்பவத்தால் சிறுவனின் உடலில் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்