ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஆப்பிளின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அவர் எகிப்தில் இருப்பதாகவும் கூறி, சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான் எனப்படும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011-ஆம் ஆண்டு தன்னுடைய 56 வயதில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக டிம் குக் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்று இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் எகிப்தில் எடுக்கப்பட்டது எனவும் ஸ்டீவ் ஜாப்ஸ் எகிப்தில் தலைமறைவாக இருப்பதாக இணையவாசிகள் அந்த புகைப்படத்தோடு சேர்ந்து பரப்பி வருகின்றனர்

.

ஆனால் இது உண்மையா? இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.

இதற்கு முன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருப்பதாக கூறி, ஒரு செல்பி புகைப்படம் ஒன்று வைரலானது. அதன் பின் அந்த நபரே வந்து கூறியதால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இந்த புகைப்படம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறார் என்று கூறி வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்