உலகையே உலுக்கிய ரஷ்ய சம்பவம்: பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சடலம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் ஏவுகணை சோதனை தோல்வியால் கொடூரமாக கொல்லப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் சடலங்களை அந்நாட்டு அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைத்திருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் நியோனோக்ஸா கிராமத்திற்கு அருகே கடந்த ஆகஸ்டு 8ம் திகதியன்று, அந்நாடு மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.

இதனால் ஏற்பட்ட பயங்கரமான குண்டு வெடிப்பில் 5 ஆயுத விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத பயங்கரமான காயங்களுடன் உயிரிழந்தனர். மேலும் அங்கு ஏற்பட்ட கதிர்வீச்சால் பலரும் படுகாயமடைந்தனர்.

அதேசமயம் கதிர்வீச்சு அப்பகுதி முழுவதும் பரவி இருப்பதால், மக்கள் வீட்டை இறுக்கமாக மூடிக்கொண்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி பேசும் வீடியோ காட்சி அந்நாட்டு ஊடங்களில் வெளியானது.

இந்த நிலையில் ஏவுகணை சோதனையின் போது கொல்லப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் சடலங்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்