உடல் முழுவதும் முடி.. 16 குழந்தைகள்... ஓநாயாக மாறும் கோரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் 16 குழந்தைகள் உடல் முழுவதும் முடி வளரும் ஓநாய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினின் Costa Del Sol பகுதியை சோர்ந்த 16 குழந்தைகளே இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலி மருந்தை உட்கொண்ட பின்னர் சுமார் 16 குழந்தைகளுக்கு ஓநாய் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Costa Del Sol-வில் அஜீரண மருந்துகளின் போலியான சில மருந்துகள் வழங்கப்பட்டதன் விளைவாக குழந்தைகளுக்கு உடல் முழுவதும் முடி உருவாக்கியுள்ளது.

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு மருந்தான omeprazole என்ற மருந்தின் போலியை உட்கொண்ட பிறகு குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.

alopecia நோயாளிகளுக்கு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் minoxidil என்ற மருந்து குழந்தைகள் உட்கொள்ளும் மருந்தில் கலக்கப்பட்டுள்ளன.

 A file photo of schoolgirl Supatra Susuphan, right, who suffers with hypertrichosis, aka Werewolf Syndrome

ஸ்பெயினில் இப்போது போலி பொருட்களை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொண்டதாக நாட்டின் மருந்து நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Malaga-வை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான Farma-Quimica Sur SL இந்தியாவில் இருந்து போலி மருந்துகளை வாங்கியதாக நம்பப்படுகிறது. மேலும், 30 மருந்தகங்கள் வரை மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலி omeprazole-வால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கான omeprazole பிரச்னை கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இது மருந்துகளின் மாத்திரை வடிவத்தை பாதிக்காது என்று ஸ்பெயின் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், குழந்தைகள் மருந்து உட்கொள்வதை நிறுத்தும்போது ஏற்படும் திடீர் முடி வளர்ச்சி நிற்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்