50 ஆண்டுகள் காத்திருந்து எதிரியை பழிவாங்கிய நபர்.... என்ன செய்தார் தெரியுமா? அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து தன்னுடைய சிறுவயது எதிரியை 50 ஆண்டுகள் காத்திருந்து அவரை பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Ang Thong பகுதியில் கடந்த சனிக்கிழமை பள்ளியில் படித்த நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். எந்த ஆண்டில் படித்தவர்கள் என்று குறிப்பிடவில்லை.

அப்போது அவர்கள் மது, உணவு, ஐஸ் கிரீம் நண்பர்களுடன் ஆட்டம் என்று மகிழ்ச்சியாக இருந்துள்ளனர், அப்போது திடீரென்று Thanapat Anakesri(69) தன்னுடைய நண்பரான Suthat Kosayamat(69)-ஐ திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைய, உடனடியாக Suthat Kosayamat மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சந்திப்பை Tuean Klakang(69) என்ற அவர்களுடன் படித்த நபர் தான் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு அவர்களுடன் பள்ளியில் படித்த ஆண், பெண் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். இதில் Thanapat Anakesri-வும் Suthat Kosayamat வந்திருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் 16 வயதில் ஏதோ பிரச்னை இருந்தது. ஆனால் அந்த பிரச்னை என்ன என்பது தெளிவாக இல்லை. எங்களுக்கு பிரச்னை இருப்பது தெரியும்.

ஆனால் இப்போது வரை அதை மறக்காமல் இருந்துள்ளார் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. அந்த சம்பவத்தை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை, இதைக் கண்டவுடன் அதிர்ச்சியடைந்தோம் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை நடத்திவிட்டு Thanapat Anakesri அங்கிருந்து தப்பிவிட்டதாகவும், பொலிசார் அவரை தேடிவருவதாகவும், அவர் முன்னாள் கடற்படை அதிகாரியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிறுவயதில் ஏற்பட்ட பிரச்னைக்கு, அவரை எதிரியாக நினைத்து 50 ஆண்டுகளுக்கு பின் அவரை பழிவாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியாகத் தான் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்