காரின் உள்ளே இருந்த சவப்பெட்டி.. திறந்து பார்த்த பொலிசார் கண்ட காட்சி! வெளியான வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொலாம்பியாவில் வெனிசுலா எல்லையை நோக்கி சென்ற வாகனத்தை சோதித்த பொலிசார், அதன் உள்ளே இருந்த சவப்பெட்டியை திறந்த பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

கொலாம்பியாவில் இருந்து வெனிசுலாவிற்கு செல்லும் பாதையான Pamplona-விற்கு அருகில் இருக்கும் Cucuta-வில் பொலிசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது Renault நிறுவனத்தின் சாம்பல் நிற காரை பொலிசார் சோதனை செய்துள்ளனர். அப்போது உள்ளே இரண்டு சவப்பெட்டிகள் இருந்துள்ளன.

அதில் ஒரு சவப்பெட்டி காலியாக இருந்துள்ளது. அதன் பின் இன்னொரு சவப்பெட்டியை சோதித்த போது அதன் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த சவப்பெட்டியில் இருந்த பொட்டலங்களை எடுத்து பார்த்த போது, அதில் இருந்த அனைத்திலுமே கஞ்சா இருந்துள்ளது, இப்படி சுமார் 514 பொட்டலங்கள்(300 கிலோ எடை) இருந்துள்ளது.

அதன் பின் டிரைவரை கைது செய்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்