தெறிக்கும் லாவா.. கடும் சீற்றத்துடன் தீப்பிழம்பை உமிழும் எரிமலை! மக்களுக்கு தடை விதிப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் உள்ள Stromboli எரிமலை, கடும் சீற்றத்துடன் தீப்பிழம்பை வெளியேற்றுவதால், கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள கடற்கரை பிரபலமான சுற்றுலாத் தளமாகும். இங்கு கடலையோட்டி அமைந்துள்ள Stromboli, 1932ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சீறி வருகிறது.

இந்த எரிமலையானது, உலகிலேயே அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என Geology.com எனும் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் Stromboli எரிமலை கடும் சீற்றத்துடன் தீப்பிழம்பை வெளியேற்றி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக புகையையும், சாம்பலையும் மட்டும் வெளியேற்றி வந்த இந்த எரிமலை, நேற்று இரவு அதிகளவில் தீப்பிழம்புகளை வெளியேற்றியது.

பல அடி உயரத்திற்கு சீறிப் பாய்ந்து லாவா குழம்புகள் தெறிக்கின்றன. மலையில் இருந்து இறங்கி வரும் நெருப்பு பொறிகள் சிதறுகின்றன.

இதனால் இதனைச் சுற்றியுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சிசிலி கடற்கரைக்கும், கடலுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சில சுற்றுலாப் பயணிகள் அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் தீப்பிழம்பு வெளியேறும் காட்சிகளை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்