ஒற்றை நபராய் சீனாவை கதிகலங்க வைத்த இளைஞர்: ஹாங்காங் போராட்டத்தின் முக்கிய சூத்திரதாரி கைது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தை மூனெடுத்து நடத்திய சமூக ஆர்வலர் ஜோஷ்வா வாங் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங் நாட்டில் முழு ஜனநாயகத்தை பின்பற்ற வலியுறுத்தி கடந்த 2014 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் ஜோஷ்வா வாங் முன்னெடுத்த போராட்டத்தில் நகரத்தின் முக்கிய பகுதிகள், சுமார் 79 நாட்கள் ஸ்தம்பித்தது.

இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான ஜோஷ்வா, 5 வார கால சிறை தண்டனைக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பின்னர் தற்போது ஜோஷ்வா தலைமையிலான அமைப்பு சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும்,

சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையிலேயே,

ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆர்வலர் ஜோஷ்வா வாங் உள்ளூர் நேரப்படி பகல் 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தமது டுவிட்டர் பக்கத்தில் ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ,

நமது பொதுச்செயலாளர் ஜோஷ்வா வாங் கடுமையான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு ஹரிசான் பகுதிக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது தனியார் மினி வேன் ஒன்றில் அவர் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நடந்ததையடுத்து நமது வழக்கறிஞர்கள், இவ்வழக்கு குறித்து ஆலோசித்து வருகின்றனர், என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களின் வழிகாட்டியாகவும், தலைமை தாங்கியவருமான ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளது, அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ, போராட்டக்கார்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடத்த மோதலை விசாரிக்கவும், போராட்டத்தை கலவரம் என்று கூறியதை திரும்பப் பெறவும்,

பொலிஸார் மேற்கொண்ட மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டுமின்றி, போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக மாறியது.

சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு என அனைத்தும் பின்பற்றப்பட்டது.

இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா முழுமையாக பின்வாங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்