என் கணவனை நீ தானே மயக்குன... இப்போ இல்லைனு சொல்றீயா! கையும் களவுமாக பிடித்த மனைவி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கணவன் வேறோரு பெண்ணுடன் இருப்பதை அறிந்த மனைவி அவரை கண்முடித்தனமாக அடிக்கும் வீடியோ வைரலானது நிலையில், தற்போது அந்த பெண்ணின் கணவரின் பதவி பறிபோயுள்ளது.

சீனாவில் கடந்த சில தினங்களாக பெண் ஒருவரை இன்னொரு பெண் அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து இந்த வீடியோ குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் Zunyi நகரத்தைச் சேர்ந்தவர் ஜியா டிங்.

இவர் அங்கிருக்கும் கட்சி ஒன்றில் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், இவர் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதை அறிந்த அவர் மனைவி, கணவன் மற்றும் அவர் இருக்கும் இடத்திற்கே சென்று கணவனுடன் இருந்த அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

அப்போது இது உங்கள் பிரச்சனை என்று அந்த பெண் கூற, உடனே இவர் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? நீங்கள் என் கணவரை மயக்கி வைத்திருக்கிறாய், இப்போது உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறாயா என்று அடிக்கிறார்.

இதை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து வெளியிடவே அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஒரு கட்சியில் இருக்கும் நபர் இது போன்ற செயலில் ஈடுபட்டதால், அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்