ஆபரேஷன் தியேட்டரில் தூங்கிய மருத்துவர்! Hero-வாக கொண்டாடும் மக்கள்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் இடைவேளை எடுக்காமல் தொடர்ந்து 7 அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை, அந்நாட்டு மக்கள் ஹீரோ என்று சமூகவலைத்தளங்களில் புகழ்ந்து வருகிண்றனர்.

சீனாவின் Shenzhen மாகாணத்தில் இருக்கும் Longgang Central மருத்துவமனையில் Orthopaedic பிரிவில் மருத்துவராக இருப்பவர் Dai.

இவர் மற்றும் மருத்துவ குழுவினர் கடந்த திங்கட்கிழமை 10 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளனர். அதில் 7 அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் Dai அடுத்த மருத்துவ சிகிச்சைக்காக 10 நிமிடம் இடைவெளி இருந்ததால், அப்போது அசதியில் operating theatre-ல் ஒரு ஓரத்தில் தூங்கியுள்ளார்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் இவர் தூங்கிக் கொண்டிருந்ததை புகைப்படமாக இருந்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதைக் கண்ட மக்கள் அவரை பாராட்டி வருவதுடன், ஹீரோ என்று வைரலாக்கி வருகின்றனர்.

இது குறித்து Dai அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அன்றைய தினம் எங்கள் குழுவினர் 10 அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டிருந்தோ. அதன் பின் 7 சிகிச்சை முடிந்து அடுத்த சிகிச்சைக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் உறங்கினேன்.

இதை அங்கிருந்த நண்பர்கள்(மருத்துவர்கள்) புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டனர். அதன் பின்பு அடுத்தடுத்த சிகிச்சைகளை செய்து முடித்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்