உலகை அதிர்ச்சியாக்கிய விடயம்.. 20 மில்லியனை நிராகரித்து பெரிய நாட்டின் உதவியை கோரும் பிரேசில்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவுவதாக கூறியபோது நிராகரித்த பிரேசில், தற்போது அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளை கொண்டிருக்கும் அமேசானில், கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

இந்த காடுகள் தென் அமெரிக்க கண்டத்தில் 8 நாடுகளில் பரவியுள்ளது. அதில் முக்கியமாக 60 சதவித பகுதி பிரேசிலில் உள்ளது. இதர பகுதிகள் வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளன.

இதன் காரணமாக காட்டுத் தீயை கட்டுப்படுத்த உதவுமாறு, உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் காட்டுத்தீயை அணைக்க சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று ஜி7 நாடுகள் அறிவித்தன. ஆனால், இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்தது. அத்துடன் அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தது.

REUTERS/Yuri Gripas

இந்நிலையில், தொடர்ந்து அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடியுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரேசில் ஜனாதிபதி போல்சனரோ, தனது மகன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு அனுப்பினார்.

முன்னதாக, அமேசான் காட்டுத்தீயை அணைக்க பிரேசிலின் முயற்சி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியதை போல்சனரோ சுட்டிக்காட்டி தற்போது இந்த உதவியை கோரியுள்ளதாக தெரிகிறது. மேலும், அமெரிக்க நாடு ஜி7 நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்