மர்மமான முறையில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நோர்வே நாட்டில் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நோர்வேயின் வடக்கே உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து நோர்வே மீட்பு சேவை ஒரு ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. அங்கு சென்ற மீட்பு படை வீரர்கள், விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் ஒருவர் மாயமாகியிருப்பதாகவும், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் நபர் மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏர்பஸ் ஏஎஸ் 350 ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகளும் ஒரு விமானியும் புறப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்திற்கு ஆல்டாவுக்கு அருகில் நடைபெற்று வரும் ஹோஸ்ட்ஸ்பிரெல் இசைவிழாவிற்கும் சம்மந்தம் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers