ரிசார்ட் பகுதியில் விழுந்து எரிந்து சாம்பலான விமானம்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று ரிசார்ட் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Barangay Pansol பகுதியில் உள்ள ரிசார்ட் பகுதியிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கலம்பா நகர பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரிசார்ட்டின் பராமரிப்பாளர்களான தாயும் அவரது மகனும் கலம்பாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மூன்று பேர் பிணமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளது.

மேலும், விமானத்தில் ஏழு பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸின் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின்படி, இந்த விமானம் பதிவு எண் RP-C2296 உடன் மருத்துவ மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த விமானமாகும்.

விமானம் டிபோலாக் நகரத்திலிருந்து மணிலாவுக்கு திரும்பும் வழியில் விபத்தக்குள்ளாகியுள்ளது. விபத்தினால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்