நேரலை நிகழ்ச்சியில் ரசிகர்ளின் முன் கொல்லப்பட்ட பாடகி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில், ரசிகர்களின் கண்முன்னே பாடகி கொல்லப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜோனா சைன்ஸ் (30) என்கிற இளம்பெண், உள்ளூரை சேர்ந்த பாடல் குழு ஒன்றில் பாடகியாக இருந்து வருகிறார்.

இவரது குழு நேற்று மாட்ரிட்டின் வடமேற்கில் உள்ள லாஸ் பெர்லானாஸ் என்ற சிறிய நகரத்தில் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளது. இதனை ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.

வீடியோவை காண...

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் மேடையில் இருந்த வெடிகள் தவறுதலாக வெடித்து சிதறியதில், ஜோனாவின் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ரசிகர் கூட்டத்தில் இருந்த மருத்துவர் தரையில் மயங்கி கிடந்த ஜோனாவிற்கு முதலுதவி கொடுத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக செல்லும் வழியிலேயே ஜோனா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்