விமானநிலையத்தில் பெண்ணின் பையை சோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சிறிய அளவிலான பை ஒன்றில் குழந்தையை மறைத்து வைத்து சென்ற நிலையில், அவர் கையும் களவுமாக விமானநிலையத்தில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் Jennifer Talbot. 43 வயதான இவர் பிலிப்பைன்சின் Manila-வில் இருக்கும் Aquino சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் செல்ல தயாராக இருந்துள்ளார்.

(Image: ViralPress)

அதன் பின் விமானநிலையத்தில் விமான அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை பயணிகளிடம் வழக்கமான சோதனை செய்து கொண்டிருந்த போது, இவர் மட்டும் அவர்களிடமிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அங்கு அதிகாரிகள் எல்லாம் சோதனை மேற்கொள்கின்றனர், சொல்ல வேண்டுமா என்று கூறியுள்ளார்.

சிசிடிவி கமெராவில் பதிவான புகைப்படம்(Image: ViralPress)

அதன் பின் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் அணிந்திருந்த oversized belt bag(இடுப்பில் அணியும் சிறிய பை)-ஐ அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர் அதன் உள்ளே பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தையை மறைத்து வைத்திருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் குழந்தைக்கான சரியான ஆவணம் இல்லாததால், அங்கிருக்கும் சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Image: ViralPress)

தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் இந்த குழந்தையின் தாயா அல்லது பாதுகாவலரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை எனவும், அவரிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால், இவர் குழந்தையை கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவர் அங்கிருக்கும் அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக விலகி செல்லும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், அதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

(Image: ViralPress)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்