சீனர் ஒருவர் பிறக்கப்போகும் தனது குழந்தைக்கு கனவு இல்லம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அந்த வீட்டில் விசேஷம் என்னவென்றால், அது முழுவதும் நூடுல்சால் செய்யப்பட்டுள்ளது!
ஆம், காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்களை சேர்த்து அழகான ஒரு வீட்டைக் கட்டியுள்ளார் Zhang என்ன்னும் அந்த சீனத் தந்தை.
சுமார் 2000 நூடுல்ஸ் பாக்கெட்களைக் கொண்டு அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் ஜன்னல்கள், படுக்கையறை போன்ற வசதிகளையும் செய்துள்ளார் அவர்.
அவருக்கு பிறக்கப்போகும் குழந்தை அதிர்ஷ்டசாலிதான், ஏனென்றால் சீனர்களுக்கு பிடித்த உணவான நூடுல்சையே அந்த குழந்தை இந்த நூடுல்ஸ் வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு அதற்கு கிடைக்க இருக்கிறதே!