உடல் முழுவதும் இரத்தத்துடன் வீதியில் ஓடிய மனைவி: தலை இல்லாமல் கிடந்த கணவன்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கணவனின் மர்ம உறுப்பை அவருடைய மனைவி துண்டாக்கி நாய்க்கு உணவாக போட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் (49) என்பவரின் மனைவி மரியா (48). திருமணம் முடிந்ததிலிருந்தே அலெக்ஸ்சாண்டர் மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட மரியா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்துள்ளார். கடந்த 23ம் திகதியன்று, இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் கோடாரியால் அவருடைய கழுத்தை துண்டாக வெட்டி எடுத்துவிட்டு, மர்ம உறுப்பை அறுத்து நாய்க்கு உணவாக வைத்துள்ளார். சடலத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என நினைத்தும் உடலை துண்டுகளாக நறுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து, வீதியில் உடல் முழுவதும் ரத்த கரைகளுடன் ஓடிவந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசித்த Nadezhda Opanasiu என்கிற வயதான பெண் இதனை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். என்ன நடந்தது என விசாரிக்கையில், நான் என்னுடைய கணவரை கொலை செய்துவிட்டேன் என மரியா அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனை நம்பாத Nadezhda Opanasiu, இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் மரியா தாக்கியிருக்கலாம், அவருக்கு மருத்துவ உதவி எதுவும் தேவைப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

ஆனால் அந்த இடத்தில் தலை இல்லாமல் அலெக்ஸ்சாண்டரின் உடல் மட்டும் கிடந்துள்ளது. தலை எங்கே என கேட்டதற்கு, சாக்குப்பையில் வைத்திருப்பதாக மரியா கூறியுள்ளார்.

பின்னர் இந்த தகவல் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மரியாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, பல ஆண்டுகளாக தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இப்படி செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்