வெளிநாட்டில் உள்ள ஹொட்டலில் தவிப்பதாக கண்ணீருடன் ஆடியோ வெளியிட்ட தமிழர்! வைத்த உருக்கமான கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற தமிழர் அங்குள்ள ஹொட்டலில் சிக்கி தவிக்கும் நிலையில் விரைவில் மீட்கப்பட்டு தாயகம் வருவார் என மாநில வெளியுறவு துறை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டத்தில் உள்ள பெரிய குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் நந்தக்குமார்.

இவர் கடந்த 12 ஆம் திகதி மலேசியாவில் உள்ள கோமதி உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு கூறப்பட்ட பணி வழங்கப்படாத நிலையில் வேறு பணிகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து அங்கு தன்னை துன்புறுத்துவதாக நந்தக்குமார் வேதனையுடன் பேசி ஓடியோ வெளியிட்டுருந்தார்.

மேலும் உடல்நிலை சரியில்லாத தன்னை ஊருக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை மீட்கும்படியும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த விடயம் மாநில வெளியுறவு துறை அமைச்சர் முரளிதரன் பார்வைக்கு சென்ற நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வரும் 11ஆம் திகதி நந்தகுமார் மலேசியாவில் இருந்து கிளம்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers