பைக்குள் மறைத்து வைத்து குழந்தையை கடத்திய பெண்: தொடர்ச்சியாக வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சமீபத்தில் தனது கைப்பைக்குள் மறைத்து வைத்து குழந்தை ஒன்றை கடத்த முயன்றதாக அமெரிக்க பெண் ஒருவர் கைதான நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

Jennifer Talbot (42) என்ற அந்த அமெரிக்கப்பெண் பிலிப்பைன்ஸ் தலைநகரம் Manilaவிலிருந்து Detroitக்கு செல்வதற்காக விமான நிலையம் செல்லும்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்பட்டதால் விமான நிலையத்தில் சிக்கினார்.

அவரை பிடித்து, அவரது கையிலிருந்த பையை சோதனையிட்ட அதிகாரிகள், அதற்குள் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிசாரிடம் குழந்தையுடன் சிக்கிய Jenniferஇடம் குழந்தையை கொண்டு செல்ல அனுமதியளிப்பதாக, குழந்தையின் தாய் எழுதியதாக கூறப்படும் ஒரு ஒப்புதல் பத்திரம் இருந்துள்ளது.

அதில், Jennifer குழந்தையின் உறவினர் என்றும், அவர் தனது பாட்டி மரண தருவாயில் இருப்பதால், குழந்தையை அவரிடம் காட்டுவதற்காக அமெரிக்கா கொண்டு செல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் விசாரித்ததில் Jenniferக்கு தந்தை வழியிலோ, தாய் வழியிலோ அப்படி ஒரு பாட்டியே இல்லை. இரண்டாவதாக அந்த கடிதம் டைப் செய்யப்பட்டிருந்தது, அதில் குழந்தையின் தாயின் கையொப்பம் இல்லை.

தொடர்ந்து விசாரித்ததில் அந்த குழந்தை, பிலிப்பைன்சின் வறுமை மிக்க பகுதியான Mt Diwata என்ற இடத்தைச் சேர்ந்த Maricris Dulap என்ற பெண்ணின் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்ற Dulapக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Dulapஐ இணையம் மூலம் தொடர்பு கொண்டுள்ள Jennifer, அவர் கர்ப்பமாக இருக்கும்போது அவ்வப்போது அவரை சென்று பார்த்துள்ளார்.

பின்னர் குழந்தை பிறந்து எட்டே நாட்கள் ஆன நிலையில், குழந்தையை வாங்கிக் கொண்டு அமெரிக்கா செல்ல முற்படும்போது பொலிசாரிடம் அவர் சிக்கியுள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள Jennifer மீது, மனித கடத்தல், குழந்தை துஷ்பிரயோகம், கடத்தல் மற்றும் மற்றும் சட்ட விரோதமாக குழந்தையை தன்னிடம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுள்ளன.

அவருக்கு 38,500 முதல் 96,200 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம். குழந்தையின் தாயாகிய Dulap மீது குழந்தையை கவனக்குறைவாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றாலும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்