சூப்பர் மார்க்கெட்டின் பின்னால் பிளாஸ்டிக் பையில் இருந்த மர்மம்: பொலிஸ் வெளியிட்ட துன்பகரமான காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட்டின் பின்னால் பிளாஸ்டிக் பையில் பிறந்த குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு ரஷ்யாவின் Cheremshan-ல் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் பின்னால் குழந்தையை ஒரு பையில் விட்டுச் செல்லும் துன்பகரமான சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், சூப்பர் மார்க்கெட்டுக்குப் பின்னால் ஒரு பெண் தனது பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் விட்டுச் செல்லும் துன்பகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

36 வயதான தாய், காசாளராக கடையில் பணிபுரிகிறார், தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன்பு புதரில் குழந்தை போடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. குழந்தையை விட்டுச் சென்று பின் அந்தப் பெண் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார்.

(Image: CEN/Investigative

பிளாஸ்டிக் பையில் குழந்தை மோசமான நிலையில் இருப்பதை கண்ட பொதுமக்களில் சிலர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். Tatarstan பிராந்தியத்தில் குழந்தையை நிர்வாணமாகவும், துயரமாகவும் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்களும் சென்றனர்.

(Image: CEN/Investigative Committee of t)

பின்னர், சிகிச்சைக்காக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இரண்டு குழந்தைகளைக்கு தாயான அப்பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் குழந்தையின் நிலை மோசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...