வெளிநாட்டிருந்து அம்மா வருவார் என்று எதிர்பார்த்திருந்த மகள்கள்... ஆனால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதியில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர். இவருக்கு வித்தியா சந்திரன் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு சந்திரிக்கா துபாயில் வேலைக்காக சென்றுள்ளார். இவருடைய மகள்கள் இரண்டு பேரும் கேரளாவில் இருக்கின்றனர்.

கேரளாவில் ஓணம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால், தங்கள் அம்மாவின் வருகைக்காக மகள்கள் காத்திருந்த நிலையில், தான் சந்திரசேகரன் நாயர் இந்த அதிர்ச்சி சம்பவத்தை செய்துள்ளார்.

சந்திரிக்கா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்ற அவர், கார் பார்க்கிங் இருக்கும் இடத்திற்கு வெளியில் அவருடன் பேசியுள்ளார். அப்போது அவருடன் நடந்த வாக்குவாத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனால் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மனைவிக்கு வேறோரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்து அவர் இந்த கொலையை செய்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வித்யாவின் மூத்த அண்ணன், அவர் தன்னுடைய அக்காவை சந்தோஷமாகவே வைத்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அம்மாவை பார்க்க காத்திருந்த இரண்டு மகள்களுக்கு தான் இது பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...