மருத்துவர் கூறிய வார்த்தையால் 2 பிஞ்சுக்குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மருத்துவமனை மாடியிலிருந்து இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு தாய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் கால் பகுதியில் குறைபாடு இருப்பதாக மட்டும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனை கூடிய விரைவில் சரி செய்துவிடலாம் என்பதை கூற மருத்துவர்கள் தவறி விட்டனர்.

ஏற்கனவே பிரசவித்த இரண்டு குழந்தைகளும் குறைபாடுகளுடன் பிறந்து இறந்திருந்ததால், மனமுடைந்து காணப்பட்ட அந்த தாய், தற்போதைய குழந்தையும் குறைபாடுடன் இருப்பதை நினைத்து பெரும் வேதனை அடைந்துள்ளார்.

east2west news

நள்ளிரவில் அனைவரும் உறங்கிய பின்னர் தன்னுடைய மகளை மாடியிலிருந்து வெளியில் தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளார். தன்னுடைய மகள் மட்டும் தூக்கி வீசப்பட்டிருந்தால் சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக, அருகாமையில் இருந்த மற்றொரு பெண்ணின் குழந்தையையும் வெளியில் தூக்கி எறிந்துள்ளார்.

இதற்கிடையில் பணி நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்த செவிலியர், இரண்டு குழந்தைகள் காணாமல் போயிருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த போது, படுகாயங்களுடன் இரண்டு குழந்தைகளும் கிடந்துள்ளன.

east2west news

இரண்டு குழந்தைகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த தாய் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால், உஸ்பெகிஸ்தான் சட்டப்படி, 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...