உலகளவில் அதிகம் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டினர்தானாம்! அதிர்ச்சித் தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட மக்களில், 40 சதவிதம் நோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக மருத்துவக்குழு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Times of India செய்தி நிறுவனம், Novartis எனும் மருந்து நிறுவனத்துடன் இணைந்து ‘Beat Heart Failure' என்ற நிகழ்ச்சியை பல நகரங்களில் நடத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவ மற்றும் கல்வியாளர்கள் குழு விவாதக் கூட்டத்தில் பங்கேற்றது. அப்போது இந்தியாவில் இதயம் சார்ந்த நோயால், சுமார் 2 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம், உலகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக (40 சதவிதம்) உள்ள நாடு இந்தியா என்று தெரிய வந்துள்ளது.

அதிகரித்து வரும் இந்த நோயை தடுக்க, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை எனவும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகளால் இதயம் செயலிழப்பு அதிகம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில், இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்த, இதய நோயாளிகளை முறையாக கணக்கெடுத்து, மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதற்கென சிறப்பு பிரிவுகளை அமைப்பதே தீர்வு என கூறப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்