சீறும் ஈரான்... பணியும் டிரம்ப்: என்ன நடக்கப்போகிறது... ஆய்வாளர்கள் கணிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுக் கூட்டத்தின் போது ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ யாார்க்கில் இம்மாதம் ஐ.நா பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரான் அமெரிக்காவுடனான சந்திப்பை விரும்புவதாக கூறினார்.

மேலும், வரவிருக்கும் ஐ.நா பொதுக் கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்திக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், ஈரானியர்கள் இதுவரை சாதகமான பதிலை அளிக்கவில்லை.

ஈரானுக்கு அழுத்தம் கொடுத்த டிரம்ப் நிர்வாகத்தை கடுமையாக சாடிய ரூஹானி, அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும், போர்க்குணம் மற்றும் வன்முறையை தூண்டுவது ஆகியவை தங்களுக்கு சாதகமாக செயல்படாது. இரண்டுமே கைவிடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் ஒருதலைப்பட்சமாக 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதோடு, தடை நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியதும், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இரு நாடுகளும் முரண்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்த வாரம் வெளியேறியதைத் தொடர்ந்து சில ஆய்வாளர்கள், இரு நாடுகளுக்கு இடையே சமரசத்திற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்