தாகத்தில் தவித்த இளைஞர்... கெமராவில் சிக்கிய காட்சி: இந்திய இளைஞருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட சிக்கல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பயணிகள் உடைமைகளை திறந்த இந்திய இளைஞர் மாம்பழங்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று, துபாய் விமான நிலையம். இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 27 வயது இந்திய இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இவருக்கு கடுமையான தண்ணீர்த் தாகம். பக்கத்தில் தண்ணீர் இல்லை. அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் சென்று கொண்டிருந்தன.

அதில் சென்ற ஒரு பாக்ஸை திறந்து தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தார். இல்லை. ஆனால், மாம்பழங்கள் இருந்தன.

அதில் இருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து அவர் தின்றதாக கூறப்படுகிறது. பிறகு வழக்கம் போல அவர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்தது 2017 ஆம் ஆண்டு. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து அவர் தங்கியிருந்த அறையில் திருட்டுப் பொருட்கள் ஏதும் இருக்கிறதா எனவும் தேடியுள்ளனர்.

இதில் ஏதும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கண்காணிப்பு கெமராவை பரிசோதித்தபோது இவர் இந்திய விமானம் ஒன்றின் பயணிகள் லக்கேஜை திறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது கைது செய்யப்பட்ட இந்தியர் தரப்பில், தாகத்தால் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங்கள் மட்டுமே எடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 23 ஆம் திகதி வழங்கப்பட இருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers