கொடூரமாக சீரழிக்கப்பட்ட 3 வயது குழந்தை... கைதானவருக்கு ஆதரவாக போராடும் மக்கள்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மியான்மர் நாட்டில்3 வயது குழந்தை சீரழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரை விடுவிக்க வலியுறுத்தி அங்குள்ள மக்கள் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தை, சுமார் 2 மணி நேரம் காணொளி இணைப்பு மூலம் சாட்சியம் அளித்துள்ளார்.

முந்தைய விசாரணைகளில் பத்திரிகையாளர்களும், பொது மக்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த விசாரணையின்போது யாரும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

மேலும், இந்த வழக்கில் குற்றம் செய்யாத நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், பொதுமக்கள் அந்த நபருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை நடந்த விவகாரம் தொடர்பில் சாட்சியம் அளித்த போது, கைதான நபரை சுட்டிக்காட்டாமல், வேறு இருவர் இந்த பாலியல் தாக்குதல் நடத்தியதாக அடையாளம் காட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 16 ஆம் திகதி காலை மியான்மர் தலைநகர் நேபிதாவிலுள்ள 'விஸ்டம் ஹில்' தனியார் மழலையர் பாடசாலைக்கு இந்த குழந்தை சென்றுள்ளது.

ஆனால் குறித்த குழந்தை குடியிருப்புக்கு வருவதற்கு முன்னால் பாலியல் வல்லுறுவுக்கு உட்ப்படுத்தப்பட்டதாக குடும்பத்தினரும், உள்ளூர் காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர்.

குறித்த குழந்தைக்கு ஏற்பட்டிருந்த காயங்களை முதலில் கவனித்த அதன் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் குறித்த குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மே மாதம் 30 ஆம் திகதி 29 வயதான பாடசாலையில் சாரதி அவுங் காவ் மயோ கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் குற்றம் செய்ததற்கான சான்றுகள் இல்லை என்று பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பிறகு ஜூலை 3ஆம் திகதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இவர்தான் குற்றவாளியா என்ற சந்தேகம் பலரிடம் நிலவுகிறது. தங்களின் வேலை முடிந்துவிட்டது என அதிகாரிகள் கூறிகொள்வதற்கு இவரை சிக்க வைத்து கைது செய்திருப்பதாக பலரும் நம்புகின்றனர்.

கமெராவில் பதிவான காட்சிகளை காட்டியபோது, குறித்த சிறுமி அவுங் காவ் மயோவை அடையாளம் காட்டியுள்ளார்.

ஆனால், அதன் பின்னர் அவுங் ஜியி-யின் புகைப்படங்களை காட்டியபோது, சிறுமி அவர்தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று சுட்டிக்காட்டவில்லை.

சிறுமி தன் மீது பாலியல் தாக்குதல் தொடுத்ததாக இரண்டு முறை அடையாளம் காட்டியுள்ள சட்டபூர்வ வயதை அடையாத இரு சிறார்கள் செய்திருக்கலாம் என பொதுமக்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்