விஷப்பாம்பை வைத்து அந்த பிரபலத்தை கொல்லுவேன்... அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பெண் பாடகி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஒருவர், இந்திய பிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொலை செய்வேன் என்று வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் பிரபல பாடகியான ரபி பிர்ஸாடா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், கை நிறைய விஷ பாம்புகளை அவர் வைத்துள்ளார். தரையில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் இருக்கிறது.

அந்த பாம்புகள், முதலைகளோடு விளையாடும் அவர், நீங்கள் (மோடி) காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள்.

இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. இறப்பதற்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலானதால், பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது லாகூரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்