கிணற்றில் துண்டு துண்டுகாக கண்டெடுக்கப்பட்ட மனித உடல்கள்... பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மெக்சிகோவின் மிகப்பெரும் போதைமருந்து கும்பல்களின் வன்முறை மையமாக ஜாலிஸ்கோ மாநிலம் விளங்குகிறது.

போட்டிக் குழுக்கள், பழிக்குப்பழி, கடத்தலில் துரோகம் என இங்கு அடிக்கடி பல்வேறு ஹோட்டல்கள், பப்புகள், மற்றும் பல இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடப்பதும், கொலைகள் அரங்கேறுவதும் சாதரணமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நகருக்கு வெளியே உள்ள கிணற்றில் மனித உடல்பாகங்கள் சில காணப்பட்டதாகவும் அங்கிருந்து வந்த துர்நாற்றம் வீசுவதாக, அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் பொலிசாருக்கு புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அங்கு நடத்த சோதனையில், இறந்த மனித உடல்கள் துண்டு துண்டாக இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான உடல்கள் யார் என்று அடையாளங் காணப்பட்டுள்ளன. அதேவேளை அந்த உடல்கள் அனைத்தும் கை வேறு கால்வேறு என துண்டிக்கப்பட்டிருப்பதால், அவற்றை சரியாக அடையாளம் காண வெவ்வேறு பகுதிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சிகள் நடந்தன.

ஆனால் அதில் போதிய அளவு வெற்றி கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் ஒரு உள்ளூர் அமைப்பு, துண்டிக்கப்பட்ட பாகங்கள் சரியான உடல்பகுதிகளுடன் இணைக்கப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் இதற்கான அடையாளங் காட்டலுக்கு உதவ கூடுதல் நிபுணர்களை அனுப்புமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இப்பிரச்சினையில் உள்ளூர் தடயவியல் துறை திணறுவதாகவும், செயல்பாட்டை முடிக்க தேவையான திறன்கள் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்