மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கான சானிட்டரி பேட்களை தயாரிக்கும் பெண்...குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் குடும்ப சூழ்நிலை காரணமாக மாதவிடாய்க்கு பெண்கள் பயன்படுத்தும் சானட்டரி பேட்களை தயாரித்த போது முதலில் அவமானப்பட்ட நிலையில், தற்போது அவரிடமே பலர் வாங்கி செல்கின்றனர்.

பாகிஸ்தானின் Booni பகுதியைச் சேர்ந்தவர் Hajra Bibi. 35 வயதான இவர் அங்கிருக்கும் சிறிய கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஊனமுற்ற கணவன், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த Hajra Bibi, தன்னுடைய குடும்பத்திற்காக யுனிசெப்ன்UNICHEF) Aga Khan என்ற கிராமப்புற ஆதரவு திட்டத்தின் மூலம் சானிட்டரி பேட்களை தயாரிப்பது எப்படி என்று பயிற்சி பெற்றார்.

இதில் இவருடன் சேர்ந்து சுமார் 80 பெண்கள் பயிற்சி பெற்றனர்.

அதன் பின் இவர் தானான பேட்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அங்கிருக்கும் கிராமத்தினர் மாதவிடாய் ஒரு வெட்கக்கேடானாது, அசுத்தமானது என்று கூறி, அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் தான் சானிட்டரி பேட்களை பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு யுனிசெப் கணக்கெடுப்பின்படி, நாட்டின் பாதி இளம் பெண்கள் அவற்றைத் தொடங்குவதற்கு முந்தைய காலங்களைப் மாதவிடாய் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை, இதை அவர்கள் முதலில், ‘மிகவும் கடுமையான நோய் அல்லது புற்றுநோய் இருப்பதாக நம்பினர்.

அதன் பின் காலப்போக்கில் இதைப் பற்றி விழிப்புணர்வு கொஞ்சம், கொஞ்சமாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் கடைக்கார ஒருவர் கூறுகையில், பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலங்களில், தங்களுடைய கணவர் மற்றும் சகோதரர் போன்றவர்களையே வாங்குவதற்கு அனுப்புகின்றனர், அவர்கள் தயங்குகின்றனர்.

ஒரு சில பெண்கள் இரவு நேரங்களில் வந்து வாங்கி செல்வர் என்று கூறியுள்ளார்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்