திருமணமான 2 மாதத்தில் மனைவிக்கு நடந்த துயரம்... வெளிநாட்டிற்கு ஓடிய கணவன்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் திருமணம் ஆன இரண்டு மாதத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் Sana Gul. 20 வயதான இவர் Aneesh Khan என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

Aneesh Khan பிரான்ஸ் நாட்டு குடியுரிமை கொண்டவர். இந்நிலையில் Sana Gul திருமணம் முடிந்தும் தான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் என்ன படிக்கிறார் என்பது பற்றி குறிப்பிடவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியதால், கோபத்தின் உச்சிக்கு சென்ற Aneesh Khan மனைவியை திட்டமிட்டு கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி மயக்க மாத்திரைகளை கொடுத்து, அவரை மயங்க வைத்து, அதன் பின் சுட்டு கொலை செய்துள்ளார். இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் Aneesh Khan வெளிநாட்டிற்கு தப்பிவிடலாம் என்று அனைத்து விமானநிலையத்திற்கும் அவரைப் பற்றிய தகவல்களை கூறியுள்ளனர்.

ஆனால் அவன் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக பெண்ணிடன் குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவன் செய்யும் செயல்களைப் பற்றி ஏற்கனவே, என் மகள் என்னிடம் குமுறினாள், ஆனால் அது இந்தளவிற்கு வந்து முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை என்று பெண்ணின் தந்தை கதறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers