5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், அது ஒரு சில மணி நேரத்திற்குள் சுமார் 34 மில்லியன் மக்களின் உயிரை காவு வாங்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

போர் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவரும் குழு ஒன்று அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் தற்போதைய அரசியல் சூழல்,

ஆயுத பலம், தாக்குதலுக்கு உள்ளாகும் நகரங்கள், இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என நிஜ தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.

இதில், போர் துவங்கிய ஒருசில மணி நேரத்தில் சுமார் 34.1 மில்லியன் மக்கள் கொத்தாக மடிவார்கள் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இன்னொரு 55.9 மில்லியன் மக்கள் படுகாயமடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நகர்வுகளை தடுக்கும் நோக்கில் Kaliningrad பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் இருந்து அணு ஆயுத எச்சரிக்கை ஏவுகணையை ஏவும் என்றால்,

அதற்கு பதிலடியாக அமெரிக்கா அணு ஆயுத தாக்குதலை ரஷ்யா மீது முன்னெடுக்கும் எனவும், இது ஐரோப்பாவில் எதிரொலிக்கும் எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரஷ்யா சுமார் 300 அணு ஆயுத ஏவுகணைகளை அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவும் எனவும்,

இதனால் சர்வதேச படைகள் ஒருங்கிணைந்து சுமார் 180 விமானங்களை அனுப்பி தாக்குதல் தொடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கட்டத்தில், போர் துவங்கி சுமார் 3 மணி நேரத்தில் 2.6 மில்லியன் மக்கள் கொத்தாக கொல்லப்பட்டிருப்பார்கள் எனவும், ஐரோப்பியா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் ஆய்வில் கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக அமெரிக்காவின் ராணுவ தளங்களில் இருந்து நாட்டோ படைகள் சுமார் 600 ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவும் எனவும், அதன் அணு ஆயுத திறனை வெளிக்கொணர இது வாய்ப்பாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு தகுந்த பதிலடியை ரஷ்யா அளிக்கும் எனவும், இந்த 45 நிமிட தாக்குதலில் 3.4 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

போரின் இறுதி கட்டத்தில் இரு அணிகளும் அதிக மக்கள் தொகை கொண்ட தலா 30 நகரங்கள் மீது குறி வைக்கும் எனவும்,

ஒவ்வொரு நகரங்கள் மீதும் 5-ல் இருந்து 10 அணு ஆயுத ஏவுகணைகள் ஏவப் படலாம் எனவும் குறித்த ஆய்வில் கூறப்படுகிறது.

45 நிமிடங்களில் முடிவுக்கு வரும் இந்த தாக்குதலில் சுமார் 85.3 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தினரால் ரஷ்யாவின் Saint Petersburg, Izhevsk, Krasnodar, Tolyatti, Krasnoyarsk ஆகிய நகரங்களுக்கும், ரஷ்ய படைகளால் அமெரிக்காவின் New York, Indianapolis, Indiana, Washington, DC, San Diego, California, Austin, Texas ஆகிய நகரங்களுக்கும் குறி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆய்வானது வெறும் எச்சரிக்கை மட்டுமே எனவும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இரு நாடுகளின் உறவும் விரிசலை மட்டுமே சந்தித்து வருகிறது எனவும் அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்