கொழுந்துவிட்டெரிந்த தீ... தூக்கத்தில் இருந்த மாணவர்கள்: உடல் கருகி மரணமடைந்த 26 சிறார்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லைபீரியா நாட்டில் உள்ள உறைவிடப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறார்கள் உள்பட 26 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் மசூதியுடன் இணைந்த கட்டிடம் ஒன்றில் உறைவிடப் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிறார்கள் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறார்கள் சிலர் 10 வயதிற்கும் கீழானவர்கள் என தெரியவந்துள்ளது. இரண்டு ஆசிரியர்களும் உடல் கருகி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனிடையே தீ விபத்து நடந்த பாடசாலையை லைபீரியா ஜனாதிபதி, ஜார்ஜ் வீ பார்வையிட்டார். அத்துடன் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்