ஈரான் பகுதியில் சவுதி போர் விமானங்கள் குண்டு மழை: பல வீரர்கள் பலி.. தாக்குதல் தளங்கள் அழிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரியாவின் கிழக்கு பகுதியில் ஈரானிய போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து சவுதி போர் விமான சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளதாக மேற்கத்திய ஆதாரத்தை மேற்கோள் காட்டி Independent Arabia செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலின் விளைவாக ஈராக்கிய எல்லையிலிருந்து கிழக்கு சிரிய நகரமான Albu Kamal பகுதியில் உள்ள ஈரானிய நிலைகள் அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதில் பல போராளிகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர், அத்துடன் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் உட்பட பல ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Albu Kamal பகுதியில் உள்ள ஈரானிய நிலைகள், குறிப்பாக Quds படைகள் மற்றும் ஈராக்-சிரிய எல்லையில் உள்ள பகுதிகளை குறிவைத்து, பிற நாடுகளைச் சேர்ந்த ஜெட் விமானங்கள் உட்பட சவுதி போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

அப்பகுதியில் இருந்து கிடங்குகள், பேட்டரிகள், ஏவுகணைகள் மற்றும் டிரோன் தளம் அனைத்தையும் அழித்தன. சவுதி எண்ணெய் நிலையங்கள் தாக்கப்பட்ட பின்னர் இந்த ஆயுதங்களை பயன்படுத்தி மற்ற சவுதி பகுதிகளை தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளது என்று நம்பப்படுகிறது என பெயர் வெளியிட மறுத்த மேற்கத்திய வட்டாரத்தை மேற்கோள் காட்டி Independent Arabia செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு Albu Kamal நகரம் மற்றும் ஈரானிய போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்து உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சவுதியின் இந்த நடவடிக்கை எச்சரிக்கையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்