விசித்திர கண்களால் அனைவரையும் ஆச்சர்யமடைய வைக்கும் சகோதரர்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துருக்கியில் மிகவும் அரிதாக மாறுபட்ட கண்களுடன் பிறந்திருக்கும் சகோதரர்களை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

துருக்கியில் உள்ள பர்சா பகுதியை சேர்ந்தவர்கள் மெஹ்மத் (11) மற்றும் கெரெம் (4) என்கிற சகோதரர்கள். இவர்கள் இருவரும் பிறக்கும்போதே மாறுபட்ட இருவேறு நிறத்திலான கண்களுடன் பிறந்துள்ளனர்.

ஒரு கண் நீல நிறத்திலும், மற்றொரு கண் பழுப்பு நிறத்திலும் இருப்பதை பார்த்து பயந்துபோன அவர்களுடைய தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அவர்களை பரிசோதித்த பின் மருத்துவர் கூறுகையில், மருத்துவத்தில் வெவ்வேறு வண்ணங்களின் இரண்டு கண்களின் நிகழ்வு "ஐரிஸ் நிறமி கோளாறு" என்று அழைக்கப்படுகிறது. இது வெவ்வேறு வண்ணங்களின் கருவிழிகளை உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, மரபணுவில் ஏற்படும் அசாதாரணங்களால் ஏற்படுகிறது.

இது விலங்குகளில் அரிதாக ஏற்படும் ஒன்று. எதிர்காலத்தில் அவர்களது நீலக் கண்கள் சில பார்வை சிக்கல்களைச் சந்திக்கக்கூடும் அல்லது மெலனோமா அல்லது நியூரோபிளாஸ்டோமா உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிறுவர்களின் கண்களை பார்த்த புகைப்பட கலைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் படம் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் - சூத் மற்றும் எஸ்ரா, அரிதான கண்களுடன் இப்படிப்பட்ட சிறுவர்களைப் பெற்றிருப்பது அதிர்ஷ்டம் என்று கூறுகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்